பதிவு செய்த நாள்
26 ஏப்2012
00:13

சென்னை:ஐபால் மீடியா நிறுவனம்,"சென்னை ரியாலிட்டி பிரப்பார்டி ஷோ 2012' என்ற பெயரில், சென்னை-நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வீட்டு வசதி கண்காட்சியை நடத்த உள்ளது.இதுகுறித்து ஐபால் குழுமத்தின் இயக்குனர் கிஷோர் குமார் கூறியதாவது:
குடியிருப்புகளுக்கான தேவையை உணர்ந்து, நிறுவனம், வீட்டு வசதி கண்காட்சியை நடத்த உள்ளது. இதில்,இன்னோ ஜியோ சிட்டி, ஹிர்கோ, விஜயசாந்தி பில்டர்ஸ் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன. இக்கண்காட்சியில், ஐந்து லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரையிலான குடியிருப்பு திட்டங்கள் இடம்பெறும்.
நாளை (27ம் தேதி), துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், முதல்முறையாக, சட்டம் மற்றும் வாஸ்து நிபுணர்கள், குடியிருப்பு குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளனர். இக்கண்காட்சியை காண, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கிஷோர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|