பதிவு செய்த நாள்
26 ஏப்2012
16:41
எம்எஸ்ஐ நிறுவனம் புதிய லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லேப்டாப்புக்கு ஜிடி70 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது ஒரு 17.3 இன்ச் கொண்டி ஸ்டீல்சீரிஸ் நோட்புக் ஆகும். 32ஜிபி ரேம், 1920 x 1080 பிக்சல் ரிசலூசன், 1 x பில்ட்இன் மைக்ரோபோன், 3டி ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டம், விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் 64 பிட் இயங்கு தளம், என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 670எம் 3ஜிபி ஜிடிடிஆர்5 க்ராபிக்ஸ் கார்டு, 750ஜிபி 7200 ஆர்பிஎம் ஹார்ட் ட்ரைவ், எச்டி மேட் எல்இடி டிஸ்ப்ளே, இன்டல் க்வாட் கோர் ஐ7 ப்ராசஸர் மற்றும் 4 எக்ஸ் பில்ட் இன் எச்டி டைன் ஆடியோ ஸ்பீக்கர்கள் என உயர்தர தொழில் நுட்பங்களுடன் இந்த லேப்டாப் வந்துள்ளது. இந்த எம்எஸ்ஐ லேப்டாப் ப்ரீ ரிகவரி டிஸ்க்கையும் சப்போர்ட் செய்யும். இந்த லேப்டாப் வலிமையான ப்ராசஸரையும் மற்றும் க்ராபிக்ஸ் ப்ராசஸரையும் கொண்டிருக்கிறது. மேலும் இந்த லேப்டாப் கேமிங் அனுபவத்திற்காக ஏராளமான கேம்களையும் மற்றும் கேமிங் நெட்வொர்க்குகளையும் கொண்டிருக்கிறது. இதன் விலை இந்தியா ரூ.100000 ஆகும்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|