டாபே நிறுவனத்திற்கு விருது டாபே நிறுவனத்திற்கு விருது ... தூத்துக்குடி துறைமுகம்: நிகர லாபம் ரூ.102 கோடி  தூத்துக்குடி துறைமுகம்: நிகர லாபம் ரூ.102 கோடி ...
கச்சா எண்ணெயை சேமிக்க கிடங்கு கட்டுவதில் தீவிரம்: - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2012
00:08

அதிக அளவில் கச்சா எண்ணெயை சேமிக்கவும், விலை ஏற்றத்தின் பாதிப்பில் இருந்த தற்காத்துக் கொள்ளவும், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை அதிகரிப்பதில், மத்திய அரசு தீவிரம்
காட்டி வருகிறது.விŒõகப்பட்டினம்தற்போது, ஆந்திராவில் விசாகப்பட்டினம், கர்நாடகாவில் மங்களூர் மற்றும் படூரில், 53.3 லட்சம் டன் கச்சா எண்ணெய் கிடங்குகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இதில்
விசாகப்பட்டினத்தில், 1,038 கோடி ரூபாய் செலவில், 13.3 லட்சம் டன் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த கிடங்கில், வரும்
அக்டோபர் மாதம் முதல் கச்சா எண்ணெய் சேமிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மங்களூரில், 732 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கிடங்கின் பணி அடுத்த ஆண்டு முடியும். இது, 15 லட்சம் டன் கச்சா எண்ணெயை சேமிக்கும் வசதி கொண்டதாகும்.படூரில், 993
கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்கு, 2014ம் ஆண்டு ஏப்ரல் முதல் செயல்பாட்டிற்கு வரும். இக்கிடங்கில், 25 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை சேமிக்க
முடியும்.இவை தவிர, மேலும், 1.25 கோடி டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், படூரில் கூடுதலாக 50 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு
அமைக்கப்படும். மேலும், ஒடிசாவில் சன்டிகோவில் என்ற இடத்திலும், குஜராத்தில் ராஜ்கோட் மற்றும் ராஜஸ்தானில் பிகானீர் ஆகிய இடங்களிலும் தலா 25 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கச்சா
எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன.பொதுவாக, தற்போது பூமிக்கடியில் பாறை குகைகளை அமைத்து, அதில் கச்சா எண்ணெய் கிடங்குகள் கட்டப்படுகின்றன. அடுத்து, புதிய
தொழில்நுட்பத்தில் உப்புக் குகை மற்றும் கான்கிரீட் தொட்டிகளில் கச்சா எண்ணெயை சேமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.நாட்டில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு எழாமல் இருக்க,
பொதுத் துறையை சேர்ந்த, இந்தியன் ஸ்ட்ராடெஜிக் பெட்ரோலியம் நிறுவனம், கச்சா எண்ணெய் கிடங்குகளை அமைத்து, அதை சேமித்து வருகிறது. வினியோகம்எதிர்பாராமல், கச்சா எண்ணெய் வினியோகம் தடைபடும் பட்சத்தில், கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெயைக் கொண்டு நிலைமையை சமாளிக்க இது போன்ற கிடங்குகள்
அமைக்கப்படுகின்றன.எண்ணெய் துறை செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, அவசர காலத்தில், இந்த கிடங்குகளிலிருந்து கச்சா எண்ணெயை வினியோகிப்பது குறித்து முடிவெடுக்கும்.




Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)