பதிவு செய்த நாள்
28 ஏப்2012
00:03

புதுடில்லி:நீண்டகால அடிப்படையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8-9 சதவீதமாக உயரும் என்று திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.எஸ் அண்டு பி நிறுவனம்,இந்திய பொருளாதார வளர்ச்சி சார்ந்த முதலீடு குறித்த தர மதிப்பீட்டை, ஒரு படி குறைத்து,"பாதுகாப்பு'என்ற நிலையில் இருந்து "இடர்பாடு' என்ற பிரிவிற்கு மாற்றியுள்ளது.இது குறித்து மாண்டேக் சிங் அலுவாலியா கூறியதாவது:
இந்தியா கடந்த 2011ம் நிதியாண்டில், 6.9 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. நடப்பு 2012-13ம் நிதியாண்டில் வளர்ச்சி காணுமா,இல்லையா என்பது தான் கேள்வி.நீண்டகால அடிப்படையில்,நாடு8-9 சதவீதவளர்ச்சி காணும். இந்த இலக்கை எட்ட பொருளாதார வளர்ச்சி பரவலாக வேண்டும்.ஆசிய நாடுகளுள், குறிப்பாக இந்தியா, சீனா ஆகியவை வளர்ச்சி கண்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் நிதி நிலை செயல்பாடு வலுவாக உள்ளது. சில சமயம், சந்தை நிலவரங்கள், தர குறியீட்டை நிர்ணயிப்பவையாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|