பதிவு செய்த நாள்
28 ஏப்2012
00:07

புதுடில்லி:நடப்பு ஏப்ரல் 11ம் முதல் 20ம் தேதி வரையிலான காலத்தில், ரயில்வே வருவாய், 3,299 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் வசூலான வருவாயை விட, 20.80 சதவீதம் (2,731 கோடி ரூபாய்) அதிகம் என, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், சரக்குகள் கையாண்டதன் மூலம் கிடைத்த வருவாய், 26.40 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,886 கோடியிலிருந்து, 2,384 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல், பயணிகள் மூலம் கிடைத்த வருவாய், 6.77 சதவீதம் வளர்ச்சி கண்டு, 751 கோடியிலிருந்து, 801 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதர வகையிலான வருவாய், 13.49 சதவீதம் உயர்ந்து, 72 கோடியிலிருந்து, 82 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், நாடு முழுவதும், 23 கோடி பயணிகள் முன்பதிவு செய்து, ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 22 கோடி என்றளவில் இருந்தது. ஆக, இடைப்பட்ட காலத்தில், முன்பதிவு செய்த பயணித்தவர்களின் எண்ணிக்கை, 13.49 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|