பதிவு செய்த நாள்
28 ஏப்2012
00:09

புதுடில்லி:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளதை அடுத்து, அயல்நாடு வாழ் இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது அதிகரித்துள்ளது.
வீழ்ச்சி:கடந்த எட்டு மாதங்களில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 18 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. சென்ற 2011ம் ஆண்டு மத்தியில், சராசரியாக 45 ரூபாய் என்றிருந்த ஒரு டாலரின் மதிப்பு, டிசம்பரில் 53 ரூபாயை தாண்டியது. இது, தற்போது, 51-52 ரூபாய் என்ற அளவில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.ரூபாய் மதிப்பு குறைந்ததால் கிடைக்கும் ஆதாயத்தை கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் வசிக்கும் ஏராளமான இந்தியர்கள், நம் நாட்டிற்கு அதிக தொகையை அனுப்பி வருகின்றனர்.
சென்ற 2011ம் ஆண்டு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், அயல்நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்டோர், 6,360 கோடி டாலர் மதிப்பிற்கு இந்தியாவில் முதலீடு மேற்கொண்டுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 15.1 சதவீதம் (5,400 கோடி டாலர்) அதிகமாகும்.குறிப்பாக, சென்ற 2011-12ம் நிதியாண்டின், டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், அயல்நாட்டு இந்தியர்கள், தாயகத்திற்கு 4,970 கோடி டாலர் அனுப்பி யுள்ளனர். இத்தொகை, முந்தைய 2010-11ம் முழு நிதியாண்டில் 5,500 கோடி டாலராக இருந்தது.
சான்பிரான்சிஸ்கோ:சென்ற நிதியாண்டின், டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாய்நாட்டிற்கு 1,750 கோடி டாலர் அனுப்பியுள்ளனர். இது, இதே காலத்தில் சாப்ட்வேர் ஏற்றுமதி வாயிலாக ஈட்டப்பட்ட, 1,580 கோடி டாலரை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற ஆண்டு, சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த வெல்ஸ் பார்கோ வங்கி, லட்சக்கணக்கான வெளிநாடு வாழ் இந்தியர்களின், தாயகத் திற்கான டாலர் பரிவர்த்தனையைக் கையாண்டுள்ளது. இவ்வங்கியின் இவ்வகை பரிவர்த்தனை, 30 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
சென்ற 2011ம் ஆண்டு, ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சியாலும், வளைகுடா நாடுகளின் பொருளாதார வளர்ச்சி காரணமாகவும், அங்கு பணிபுரியும் இந்தியர்கள் அதிக அளவில் தாயகத்திற்கு பணம் அனுப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதன் அடிப்படையில், தற்போது, உலக வங்கியின் மறுமதிப்பீட்டில், அயல்நாடு வாழ் இந்தியர்கள், தாயகத்திற்கு அனுப்பும் தொகை 580 கோடி டாலர் அளவிற்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக் கப் பட்டுள்ளது.
அதிக வட்டி :ரூபாய் வெளிமதிப்பு வீழ்ச்சி மட்டுமின்றி, அன்னியச் செலாவணியிலான டெபாசிட்டிற்கு இந்திய வங்கிகள் தரும் அதிக வட்டியும், அயல்நாடு வாழ் இந்தியர்களை ஈர்க்கும் அம்சமாக உள்ளது.சென்ற 2011ம் ஆண்டு நவம்பர் முதல், அயல்நாடு வாழ் இந்தியர்களின் அன்னியச் செலாவணியிலான டெபாசிட்டிற்கான வட்டி 1.25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, அயல்நாடு வாழ் இந்தியர்கள், தாய்நாட்டில் சேமிக்கும் தொகை, 20-25 சதவீதம் வளர்ச்சி காணும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|