பதிவு செய்த நாள்
28 ஏப்2012
00:19

புதுடில்லி:வரும் கரீப் பருவத்தில் (குளிர்கால சாகுபடி), நாட்டில், யூரியா, பொட்டாஷ், டை அமோனியம் பாஸ் பேட் உள்ளிட்ட உர வகைகளுக்கான தேவை, 2.14 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மத்திய வேளாண் இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா, பார்லிமென்டில் தெரிவித்தார்.
யூரியா உரம்:மேற்கண்ட மொத்த உர வகைகளுக்கான தேவையில், கரீப் பருவத்திற்கு, 1.58 கோடி டன் யூரியா வும், 69.40 லட்சம் டன் டை -அமோனியம் பாஸ்பேட்டும், 55.50 லட்சம் டன் கலப்பு வகை உரமும், 28.90 லட்சம் டன் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரமும், 21.90 லட்சம் டன் பொட்டாஷ் உரமும் தேவைப்படும் என, அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான சாகுபடி காலத்தில், 2.88 கோடி டன் யூரியா உரத்திற்கு தேவை இருந்தது. இதுதவிர, 1.23 கோடி டன் டை-அமோனியம் பாஸ்பேட்டும், 45 லட்சம் டன் பொட்டாஷ் உரமும், 1.02 கோடி டன் கலப்பு உரத்திற்கும் தேவை இருந்தது.உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அள விற்கு, இவற்றின் உற்பத்தி இல்லாததால், நம் நாடு, ரசாயன உரங்களை வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்து கொள்ள வேண்டியுள்ளது.கடந்த 9வது மற்றும் 10வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், நாட்டின் மொத்த உரத் தேவையில், முறையே, 12 சதவீதம் மற்றும் 22 சதவீத அளவிற்கு, உர வகைகள் இறக்குமதி செய்து கொள்ளப்பட்டன.
புதிய தொழிற்சாலை:அதிகரித்து வரும், உரத் தேவையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, நாட்டின் பல மாநிலங்களில், புதிதாகவும், ஏற்கனவே உள்ள உரத் தொழிற்சாலை களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகை யில், புதிய முதலீட்டு கொள்கையை அமல்படுத்தி வருகிறது.உள்நாட்டில் உர உற்பத்திக்கும், தேவைக்கும் இடை யில், 90 லட்சம் டன் என்றளவில் இடைவெளி உள்ளது. என, அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|