உரத்திற்கான தேவை 2.14 கோடி டன்னாக உயரும் உரத்திற்கான தேவை 2.14 கோடி டன்னாக உயரும் ... இந்தியா - அமெரிக்கா 8 பில்லியன் டாலர் ஒப்பந்தம் இந்தியா - அமெரிக்கா 8 பில்லியன் டாலர் ஒப்பந்தம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நாட்டின் தானிய ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2012
00:28

புதுடில்லி:கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாட்டின் தானிய உற்பத்தி, சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நம் நாடு தொடர்ந்து, உணவு தானியங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நிலை உருவாகும் என, வேளாண் துறை செயலர் பிரபீர் குமார் பாசு தெரிவித்தார்.
ஏற்றுமதிக்கு தடை: கடந்த 2007ம் ஆண்டில், நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்து போனதை அடுத்து, மத்திய அரசு, அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டு களாக, நெல் மற்றும் கோதுமை உற்பத்தி, உள்நாட்டுத் தேவைக்கும் அதிகமாக உள்ளது.
சென்ற செப்டம்பர் மாதத்தில், கோதுமை மற்றும் சாதாரண வகை அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேசமயம், சர்வதேச சந்தையில், கோதுமையின் விலை சரிவடைந்ததை அடுத்து, எதிர்பார்த்த அளவிற்கு, இதை ஏற்றுமதி செய்ய முடியவில்லை.தற்போது, நாட்டின் தானிய உற்பத்தி அதிகரித்து வருவதை அடுத்து, வரும் 2016-17ம் ஆண்டிலிருந்து, ஆண்டுக்கு, ஒரு கோடி டன் என்றளவில், தொடர்ந்து ஏற்றுமதி செய்ய முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2009-10ம் ஆண்டில், நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி, 21.80 கோடி டன்னாக அதிகரித்தது.
உள்நாட்டு தேவை:அண்மைக் காலமாக, நம் நாடு, மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு நாடுகளுக்கு, அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது. வங்க தேசத்திற்கு, குறைந்தளவில், கோதுமையும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.கடந்த 2007ம் ஆண்டில், கோதுமை உற்பத்தி, மிகவும் குறைந்து போனது.இதனால், நம் நாடு, அவ்வாண்டில் கோதுமையை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது.தற்போதைய நிலையில்,120 கோடிமக்கள் தொகை கொண்ட நம் நாட்டிற்கு, ஆண்டுக்கு 7.60 கோடி டன் கோதுமையும், 9 கோடி டன் அரிசியும் தேவைப் படுகிறது. அதேசமயம், மேற்கண்ட இரு தானியங்களின் உற்பத்தி, தேவையை விட மிகவும் அதிகரித் துள்ளது.
ஆனால், தானியங்களைச் சேமித்து வைப்பதற்கு, போதிய இட வசதி இல்லாததால், பல மாநிலங்களில், வெட்ட வெளியில் தானியங்களை தார்பாய்கள் மூலம் மூடி பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, அரிசி மற்றும் கோதுமையை ஏற்றுமதி செய்யும் வகையில், அரசின் கொள்கை திட்டங்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
பருப்பு வகைகள்:நெல் மற்றும் கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ள அதேசமயம், பருப்பு வகைகள் உற்பத்தி, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. தற்போது, இந்தியாவில், ஆண்டுக்கு, 1.70 கோடி டன் அளவிற்கு பருப்பு வகைகள் உற்பத்தியாகிறது. எனவே, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, நம் நாடு கனடா, ஆஸ்திரேலியா, மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து, பருப்பு வகைகளை இறக்குமதி செய்து கொள்கிறது.
எண்ணெய் வித்துக்கள்:எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியும் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. இதுவும், அரசுக்கு, இடர்பாடு அளிக்கும் அம்சமாக உள்ளது. உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய, நம் நாடு தாவர எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்து கொள்கிறது. சர்வதேச அளவில், தாவர எண்ணெய் இறக்குமதி யில், இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது.
நம்நாடு, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து பாமாயிலையும், பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளிலிருந்து, குறைந்தளவில் சோயா எண்ணெயையும் இறக்குமதி செய்து கொள்கிறது என, பாசு மேலும் தெரிவித்தார்.
கடந்த 2011-12ம் பருவத்தில், நாட்டின் தானிய உற்பத்தி, 25.26 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய பருவத்தில், 24.48 கோடி டன்னாக இருந்தது என, மத்திய வேளாண் அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார்:வரும் 2016-17ம் வேளாண் பருவத்தில், நாட்டின் தானிய உற்பத்தி, 27 கோடி டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில், சாகுபடி பரப்பளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், வேளாண் துறையில் இயந்திரமயமாக்கல், வறட்சி மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில் சாகுபடி முறைகளில் மாற்றம் மற்றும் உயர்வகை விதைகள் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டு வருவதால், நாட்டின் தானிய உற்பத்தி சிறப்பாக இருக்கும் என, பாசு குறிப்பிட்டார்.
இதுபோன்ற காரணங்களால், நம் நாடு, 2016-17ம் ஆண்டுகளிலிருந்து, அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட முக்கிய தானிங்களைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உருவெடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)