பதிவு செய்த நாள்
28 ஏப்2012
11:18

சென்னை: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிளாட்பார கட்டண உயர்வு, வரும் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூர் ஏலகிரி எக்ஸ்பிரஸ், திருப்பதி விரைவு பாசஞ்சர் ஆகிய ரயில்கள், வளத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தடம் எண் வண்டியின் பெயர் நேரம்
16089 சென்னை சென்ட்ரல் - ஏலகிரி எக்ஸ்பிரஸ் 8.47/8.48
16090 திருப்பத்தூர் - சென்னை சென்ட்ரல் ஏலகிரி எக்ஸ்பிரஸ் 5.42/5.43
56214 திருப்பதி - சாமராஜாநகரா விரைவு பாசஞ்சர் 12.43/12.45
56213 சாமராஜாநகரா - திருப்பதி விரைவு பாசஞ்சர் 12.50/12.52
மேற்கூறப்பட்ட ரயில்கள், வரும் 10ம் தேதி முதல், இந்த ஆண்டு டிசம்பர் வரை, சோதனை முறையில், வளத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மேலும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, வரும் ஒன்றாம் தேதி முதல் பிளாட்பார கட்டணம், மூன்று ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு, தென்னக ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|