பதிவு செய்த நாள்
28 ஏப்2012
11:50

ஜெர்மனியை சேர்ந்த ஆடி சொகுசு கார் நிறுவனம் கோவையில் புதிய ஷோரூமை திறந்துள்ளது. இந்திய வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஆடி கார் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நெருங்கிய சேவை அளிக்கும் வகையில், புதிய ஷோரூம்களை திறந்து வருகிறது. அந்த வகையில், சென்னைக்கு அடுத்து தமிழகத்தில் இரண்டாவது கார் ஷோரூமை கோயம்புத்தூரில் ஆடி கார் நிறுவனம் திறந்துள்ளது. தென்னிந்தியாவில் ஆடி நிறுவனத்தின் 5 வது ஷோரூம் இது. ஆடி கோயம்புத்தூர் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ள இந்த ஷோரூம் 6102 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஷோரூமை ஆடி கார் நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் பெர்ஷகே இன்று திறந்து வைத்தார். இந்த ஷோரூமில் 6 கார்களை பார்வைக்கு நிறுத்த முடியும். மேலும், ஆடியின் அனைத்து கார் மாடல்களும் இந்த ஷோரூமில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவினாசி சாலையில் 13250 சதுர அடி பரப்பளவில் சர்வீஸ் ஸ்டேஷனும் கட்டப்பட்டுள்ளது. இந்த சர்வீஸ் ஸ்டேஷனில் நாள் ஒன்றுக்கு 10 கார்கள் சர்வீஸ் செய்ய முடியும். இங்கு பயிற்சி பெற்ற பணியாளர்களை கொண்டு உலகத் தரம் வாய்ந்த சர்வீஸ் வசதிகளை கொடுக்க இருப்பதாக ஆடி கார் நிறுவனத்தின் டீலராக நியமிக்கப்பட்டுள்ள ஜான்வி மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|