பதிவு செய்த நாள்
28 ஏப்2012
16:23

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க விவசாய கூட்டுறவு கடன் சங்கங்களை அடுத்த 2016ம் ஆண்டிற்குள் ரூ.27.43 கோடியில் புனரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கீழ் 28 கிளைகள் செயல்படுகின்றன. இது தவிர 40க்கும் மேற்பட்ட தொடக்க விவசாய கூட்டுறவு கடன் சங்கங்களும் செயல்படுகின்றன. இந்த சங்கங்கள் நலிவடைந்ததால் மத்திய கூட்டுறவு வங்கி,அதை சார்ந்த கிளைகள் மற்றும் தொடக்க விவசாய கூட்டுறவு கடன் சங்கங்களை மீட்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தேசிய மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக, கூட்டுறவு வங்கிகளை தரம் உயர்த்த கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. ரூ.27.43 கோடி: இதன் ஒரு கட்டமாக மலம்பட்டி, திருப்புத்தூர் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளுக்கு தலா 14 லட்ச ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. மேலும் சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.30 லட்சத்தில் கம்ப்யூட்டர், ஏ.சி., ஜெனரேட்டர் வசதியுடன் புனரமைப்பு பணிகள் நடக்கிறது.
இந்த வங்கியின் கீழ் உள்ள கிளை வங்கிகள் திறம்பட செயல்பட விவசாய நகை கடன், விவசாயம் சார்ந்த கடன்கள் வழங்கி வணிகத்தை பெருக்க, ஆண்டுக்கு ரூ.1கோடி ஒதுக்கப்படும். வங்கி கிளைகள் 12க்கு புதிய கட்டடம் தலா 14 லட்ச ரூபாயில் கட்டப்படும். படிப்படியாக 2016க்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மத்திய, தொடக்க விவசாய கூட்டுறவு வங்கிகளை புனரமைக்கப்படும். ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்ட இணைப்பதிவாளர் செந்தமிழ்செல்வி கூறியதாவது: தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம், தமிழக அரசின் பங்களிப்புடன் நிதி ஒதுக்கப்பட்டு வங்கி கிளைகளை புனரமைக்கும் பணி நடக்கிறது. 2016க்கு பின் இம்மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் தன்னிறைவு பெற்ற வங்கிகளாக மாறும்,என்றார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|