பதிவு செய்த நாள்
30 ஏப்2012
00:33

நடப்பாண்டு, வழக்கத்தை விட முன்னதாகவே கோடைக்காலம் துவங்கி விட்டதால், உடல் சூட்டை தணிக்கும் இள நீருக்கான தேவை அதிகரித்துள்ளது.இதனால், சில மாதங்களுக்கு முன்பு 15-18 ரூபாய் வரை விற்ற இளநீர், தற்போது, 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில், இளநீர் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இளநீர் உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், அது தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாக இல்லை.தமிழகத்தில் உற்பத்தி யாகும் இளநீர், மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதால்,குறைந்த அளவிற்கே கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது என, இளநீர் விற்பனையாளர் மேத்யூ ஜோசப் தெரிவித்தார்.கோடை காலத்தில்,கேரளா வில் கொப்பரை உற்பத்தி விறுவிறுப்பாக இருக்கும் என்பதால், இளநீர் வினியோகம் குறைவாகவே உள்ளது. அதனால் அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்து அதிக அளவில் இளநீரை வரவழைக்க வேண்டியுள்ளது என, இளநீர் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து, கொச்சி எண்ணெய் வியாபாரிகள் சங்கத் தலைவர் தாலத் முகமது கூறும்போது,"கேரளாவில் தேங்காய் உற்பத்தி உச்சத்தில் உள்ளது. அதனால், கொப்பரை உற்பத்தியில் பாதிப்பில்லை' என்று தெரிவித்தார்.பெரும்பாலான சமையல் எண்ணெய் வகைகள், கிலோ 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகின்றன. ஆனால்,தேங்காய் எண் ணெய் விலை, கிலோ 70 ரூபாயாக உள்ளது. அதனால், சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றில் தேங்காய் எண்ணெயை கலந்து பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இந்திய சந்தையில் தேங்காய் எண்ணெய்க்கான தேவை உயர்ந்துள்ளது என தாலத் முகமது மேலும் கூறினார்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|