பதிவு செய்த நாள்
02 மே2012
23:54

புதுடில்லி: பார்தி ஏர்டெல் நிறுவனம், சென்ற நிதியாண்டிற்கு, 1 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு, 5 ரூபாய் டிவிடெண்டாக வழங்க முடிவு செய்துள்ளது.சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், இந்நிறுவனம், 1,006 கோடி ரூபாயை ஒட்டு மொத்த நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில்,1,400 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 18 ஆயிரத்து 508 கோடியிலிருந்து, 18 ஆயிரத்து 739 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்நிறுவனம், சென்ற முழு நிதியாண்டில், 4,259 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, 29.6 சதவீதம் (6,047 கோடி ரூபாய்) குறைவாகும்.இதே நிதியாண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 20 சதவீதம் அதிகரித்து, 59 ஆயிரத்து 538 கோடியிலிருந்து, 71 ஆயிரத்து 451 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|