பதிவு செய்த நாள்
02 மே2012
23:58
புதுடில்லி: சென்ற மார்ச் மாதத்தில், சர்வதேச காபி ஏற்றுமதி, 99 லட்சம் மூட்டைகளாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில், 1.05 கோடி மூட்டைகளாக இருந்தது என, சர்வதேச காபி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.நடப்பு காபி பருவத்தின் (அக்.,-செப்.,), முதல் ஆறு மாத காலத்தில், சர்வதேச காபி ஏற்றுமதி, 2.3 சதவீதம் குறைந்து, 5.17 கோடி மூட்டைகளாக குறைந்துள்ளது.சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில், இதன் சர்வதேச ஏற்றுமதி, 1.9 சதவீதம் உயர்ந்து, 10.33 கோடி மூட்டைகளாக அதிகரித்துள்ளது. எனினும், அரபிகா வகை காபி ஏற்றுமதி, 3.9 சதவீதம் சரிவடைந்து, 6.48 கோடி மூட்டைகளாக குறைந்துள்ளது. அதேசமயம், ரோபஸ்டா வகை காபி ஏற்றுமதி, 14 சதவீதம் வளர்ச்சிகண்டு, 3.86 கோடி மூட்டைகளாக அதிகரித்துள்ளது என, இந்த கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|