பதிவு செய்த நாள்
03 மே2012
00:01

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நாட்டின் சர்க்கரை உற்பத்தி, சென்ற அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான ஏழு மாத காலத்தில், 11 சதவீதம் அதிகரித்து, 2.51கோடி டன்னாக உயர்ந்துள்ளது.பி@ரசில்உலகளவில், சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில், நடப்பு சர்க்கரை சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி 2.60 கோடி டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.உத்தரபிரதேசத்தில், சர்க்கரை உற்பத்தி 11 லட்சம் டன் அதிகரித்து, 69.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இதனால், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளதாக, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா) தெரிவித்துள்ளது.அக்டோபர் முதல் செப்டம்பர் வரை, சர்க்கரை சந்தைப்படுத்தும் காலமாகும். சர்க்கரை உற்பத்தியில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.இலக்குஇம்மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி, சென்ற ஏப்ரல் நிலவரப்படி, 5 லட்சம் டன் உயர்ந்து 88.30 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் கர்நாடகாவில் 37.10 லட்சம் டன்னும், தமிழகத்தில் 15.70 லட்சம் டன்னும், ஆந்திராவில் 11.10 லட்சம் டன்னும் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.எதிர்பார்த்தபடி, நாட்டின் சர்க்கரை உற்பத்தி உயர்ந்துள்ளதால், நடப்பு சர்க்கரை சந்தைப்படுத்தும் பருவத்தில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கு அளவான 2.60 கோடி டன் சர்க்கரை உற்பத்தி இருக்கும் என, 'இஸ்மா' தெரிவித்துள்ளது.தமிழ்நாடுதற்போதைய நிலவரப்படி, இலக்கு அளவை எட்ட இன்னும் 9 லட்சம் டன் சர்க்கரை தேவையாக உள்ளது. நடப்பு மே முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், தமிழகம் 6.5 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதர மாநிலங்களின் பங்களிப்பையும் சேர்த்தால், சர்க்கரை உற்பத்தி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் என, 'இஸ்மா' தெரிவித்துள்ளது.ஆனால், மத்திய வேளாண் அமைச்சகம், நடப்பு சர்க்கரை சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.52 கோடி டன் என்ற அளவில் தான் இருக்கும் என மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி
மத்திய அரசு விரைவில் மேலும், 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கும் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா ராஜ்யசபாவில் தெரிவித்தார்.நாட்டின் சர்க்கரை உற்பத்தி, தேவையை விட அதிகரிக்கும் என்பதால் குறிப்பிட்ட அளவிலான ஏற்றுமதிக்கு மத்திய அரசு அவ்வப்போது அனுமதி வழங்கி வருகிறது.இதன்படி, சென்ற மார்ச் மாதம் 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், தற்போது சர்க்கரை உற்பத்தி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நுகர்வோர் நல அமைச்சகத்தின் உணவு மற்றும் பொது வினியோக துறையின் அனுமதிக்கு பிறகு, கூடுதல் சர்க்கரை ஏற்றுமதிக்கான அரசாணை பிறப்பிக்கப்படும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|