பதிவு செய்த நாள்
05 மே2012
10:12

ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனம், இந்தியாவில் 2008ம் ஆண்டு முதல், யமஹா இந்தியா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. பஸர், ஆர்15, எஃப்இஸட் 16, எஃப்இஸட் - எஸ் ஆகிய நான்கு மாடல் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இதில் எஃப்இஸட் 16 மாடல் பைக், மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதை அடிப்படையாக வைத்து தான், எஃப்இஸட் - எஸ் பைக், 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு பைக்குகளிலும் அவ்வப்போது பல மாறுதல்களை, யமஹா நிறுவனம் செய்து வருகிறது. அந்த வகையில், எஃப்இஸட் - எஸ் பைக் தற்போது ஆரஞ்ச் வண்ணத்தில் வெளி வந்துள்ளது. கறுப்பு மற்றும் ஆரஞ்ச் என இரண்டு வண்ணங்களில் வெளி வந்துள்ள இந்த பைக்கின், பின்புற இருக்கையின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. இதில், 153 சிசி திறன் கொண்ட ஃபோர் ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|