பதிவு செய்த நாள்
05 மே2012
10:55

ராமநாதபுரம்: வருவாய் குறைந்ததால், பி.எஸ்.என்.எல்., "3ஜி' டேட்டா கார்டுக்கான கட்டணம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்., லேண்ட்லைனில் பிராட்பேண்ட் வசதி பெற்றவர்கள், தொடர்பு அடிக்கடி துண்டிக்கப்படுவதாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பிராட்பேண்ட் இணைப்பை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். ஆனால், யு.எஸ்.பி., மோடத்திற்காக வழங்கப்படும் "3ஜி' சிம் கார்டு விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த சேவையில் பிரச்னை இல்லை என்பதோடு, டவுன்லோடு வேகமும் அதிகம் என்பதால், இதை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 20 எம்.பி.,(மெகாபைட்ஸ்) முதல் 30 ஜிபி(ஜிகாபைட்ஸ்) வரை வெவ்வேறு வகையான கட்டணங்களும், கால பயன்பாடும் உள்ளன. குறைந்தளவான 20 எம்.பி.,க்கு ஒரு நாள் பயன்பாட்டிற்கு ரூ.12 முதல், 30 "ஜிபி'க்கு(90 நாள் பயன்பாடு) ரூ.3,002 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 30 நாள் பயன்பாடுக்காக 5 "ஜிபி' கட்டணம் ரூ.751ல் இருந்து 1,251 ஆகவும், 10 "ஜிபி'க்கு ரூ.1,261ல் இருந்து 1801 ஆகவும், 15 "ஜிபி'க்கு ரூ.1,576ல் இருந்து 2,251 ஆகவும், கடந்த சில நாட்களுக்கு முன் உயர்த்தப்பட்டது. இதையடுத்து பலர் ரீசார்ஜ் செய்வதை தவிர்த்தனர். வருவாய் தடலாடியாக குறைந்து போனதால் 5, 20 "ஜிபி' முறையை ரத்து செய்தும், 10 "ஜிபி'க்கான கட்டணத்தை ரூ.1,900 ஆகவும், 15 "ஜிபி'க்கு ரூ.1501 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் கூறுகையில், ""தனியார் நிறுவனங்கள் கட்டணம் குறைத்ததை அடுத்து நாங்களும் குறைத்துள்ளோம்,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|