பதிவு செய்த நாள்
10 மே2012
10:56

கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடி வரும் ஏர் இந்தியா விமானத்தை, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்துடன் இணைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இது தவறான செயல் என்று மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் அஜித் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஏர் இந்தியா விமான சேவைகளும், இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவைகளும் முற்றிலும் வித்தியாசமானது. இரு நிறுவனங்களில் பணியாற்றி கொண்டிருக்கும் ஊழியர்களுக்கான பதவி, அவர்களது சம்பளம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இரண்டு நிறுவனங்களுக்கும் வித்தியாசமாக இருக்கிறது. ஏற்கனவே சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சொல்லி ஏர் இந்தியா ஊழியர்கள் அடிக்கடி வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இப்போது கூட ட்ரீம்லைனர் விமான பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்படி இருக்கையில் இந்த இரண்டு நிறுவனங்களையும் இணைப்பது என்பது தவறான செயல் என்று கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|