பதிவு செய்த நாள்
10 மே2012
15:35

புதுடில்லி : ஜனவரி முதல் மார்ச் மாதம் முடிய இந்தியாவில் தேயிலை உற்பத்தி 13 சதவீதம் சரிவடைந்துள்ளது. உலகளவில் அனைவராலும் பருகப்படும் பானம் டீ. உலகில் அதிக தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் முடிய தேயிலை உற்பத்திக்கான அளவீட்டை தேயிலை ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ஜனவரி மாதத்தில் 18.69 மில்லியன் கிலோவும், பிப்ரவரி மாதத்தில் 16மில்லியன் கிலோவும், மார்ச் மாதத்தில் 47.60 மில்லியன் கிலோவும் உற்பத்தி செய்து இருக்கிறது. கடந்த 3 மாதங்களில் இந்தியாவில் மொத்தம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை 82.29 மில்லியன் கிலோவாகும். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 13 சதவீதம் சரிவாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 94.39 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்திருந்தது.
வட இந்தியாவை பொறுத்தமட்டில் அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 19.86 மில்லியன் கிலோவும், 17.53 கிலோவும் பிற மாநிலங்களில் சேர்த்து மொத்தம் 37.52 மில்லியன் கிலோவும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 45.55 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது.
தென் இந்தியாவை பொறுத்தமட்டில் தேயிலை உற்பத்தியில் கடந்த 3 மாதங்களில் 48.84(கடந்த ஆண்டு) மில்லியன் கிலோவில் இருந்து 44.77 மில்லியன் கிலோவாக குறைந்திருக்கிறது.
பொதுவாக கோடை காலங்களில் வெயில் அதிகமாக இருப்பதால், வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும், இதனால் உற்பத்தி சற்று பாதிக்கப்படுவது இயல்பு தான் என்று தேயிலை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|