பதிவு செய்த நாள்
10 மே2012
15:50

புதுடில்லி : சம்பள பிரச்னை தொடர்பாக தொடர்ந்து இழுத்தடித்து வரும் கிங்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையாவின் போக்கை கண்டித்து அந்த விமானத்தை சேர்ந்த ஊழியர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். கடுமையான நிதி நெருக்கடியில் கிங்பிஷர் விமானம் சிக்கி தவித்து வருகிறது. இதனை சரிக்கட்ட விஜய் மல்லையா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஊழியர்களுக்கான ஜனவரி மாதத்திற்கான சம்பளத்தை நேற்று கொடுப்பதாக விஜய் மல்லையா அறிவித்து இருந்தார். ஆனால் இதுவரை அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதனால் விமான ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்து இருக்கின்றனர். இதனால் டில்லி மற்றும் மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|