பதிவு செய்த நாள்
10 மே2012
16:45

மும்பை : வாரத்தின் நான்காவது நாளில் 150 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் மாலையில் 60 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 59.53 புள்ளிகள் சரிந்து 16,420.05 புள்ளியிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி குறியீட்டு எண் 9.10 புள்ளிகள் சரிந்து 4,965.70 புள்ளிகளிலும் முடிந்தன. காலையில் இந்திய பங்குசந்தைகள் உயர்ந்திருந்த போதிலும் ஆசிய மற்றும் ஐரோப்பா பங்குசந்தைகளின் வீழ்ச்சி இந்திய பங்குசந்தையிலும் சரிவை ஏற்படுத்தியது. பங்குசந்தையின் மதிப்பை அறிய உதவும் 30 பங்குகளில் 20 பங்குகள் சரிந்தும், 9 பங்குகள் விலை உயர்ந்தும், ஒரு பங்கின் விலை நடுநிலையாகவும் காணப்பட்டது. வாரத்தின் 4வது நாளில் ஆட்டோமொபைல் மற்றும் ஸ்டீல் நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|