உருக்கு உற்பத்தி 60 லட்சம் டன்னாக உயர்வுஉருக்கு உற்பத்தி 60 லட்சம் டன்னாக உயர்வு ... பி.எஸ்.என்.எல்., "பேன்சி' நம்பர்கள் விற்பனை பி.எஸ்.என்.எல்., "பேன்சி' நம்பர்கள் விற்பனை ...
நடப்பாண்டு மார்ச் மாதத்தில்...தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 3.5 சதவீதமாக பின்னடைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2012
00:30

புதுடில்லி:சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, மைனஸ் 3.5 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 9.4 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
சுரங்க துறை:மதிப்பீட்டு காலத்தில், தயாரிப்பு மற்றும் சுரங்க துறைகளின் சுணக்க நிலையால், நாட்டின் ஒட்டு மொத்த தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி வீழ்ச்சி கண்டுள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 2.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் (2010-11), 8.2 சதவீதம் என்றளவில் உயர்ந்து காணப்பட்டது.
பணவீக்க உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மின் தட்டுப்பாடு, மூலப் பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றால், ஒட்டு மொத்த அளவில் நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி குறைந்து போயுள்ளது. இதேபோன்று, சுரங்கத் தொழில் நடவடிக்கைகளுக்கு தடை மற்றும் புதிய சுரங்கங்களில் பணிகளை மேற்கொள்வதில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாடு போன்றவற்றால், இத்துறை வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்து போயுள்ளது. இது, நாட்டின் ஒட்டு மொத்த தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்ற நிதியாண்டில், தயாரிப்பு துறையின் வளர்ச்சி 2.9 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதே சமயம், சுரங்க துறையின் வளர்ச்சி, மைனஸ் 2 சதவீதம் என்றளவில் உள்ளது. இதன் காரணமாகவே, நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.தயாரிப்பு துறை:ஒட்டு மொத்த தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி குறியீட்டு எண், கணக்கிடுவதில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு 75 சதவீதம் என்றளவில் உள்ளது.சென்ற மார்ச் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி, மைனஸ் 4.4 சதவீதம் என்றளவில் பின்னடைவை கண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி 11 சதவீதமாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
இதே காலத்தில், சுரங்கத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 0.4 சதவீதமாக பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி 1.3 சதவீதமாக காணப்பட்டது.பொறியியல் துறை:சென்ற மார்ச் மாதத்தில், பொறியியல் துறையின் உற்பத்தி வளர்ச்சி மைனஸ் 21.3 சதவீதமாகவும், கடந்த ஆண்டு இதே மாதத்தில், 14.5 சதவீதம் என்றளவில் வளர்ச்சியாகவும் காணப்பட்டது.
நுகர்பொருட்கள் துறையின் உற்பத்தி 0.7 சதவீதம் என்ற அளவில் மிக குறைந்த வளர்ச்சியை கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 13.2 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதேபோன்று, சென்ற மார்ச்சில், நுகர்வோர் சாதனங்கள் துறை உற்பத்தி 0.2 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டுள்ளது.இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில், 14.9 சதவீதம் என்றளவில் மிக சிறப்பாக வளர்ச்சி கண்டிருந்தது.
இதே மாதங்களில், மின்சார துறையின் உற்பத்தி வளர்ச்சி, 7.2 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக குறைந்துள்ளது.கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது, சென்ற மார்ச்சில், தயாரிப்பு துறையைச் சேர்ந்த 22 தொழிற் பிரிவுகளில், 10 தொழிற் பிரிவுகளின் உற்பத்தி வளர்ச்சி நல்ல அளவில் அதிகரித்துள்ளது.இடைநிலை பொருட்கள்:அடிப்படை பொருட்களின் உற்பத்தி 1.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 6.4 சதவீதம் என்றளவில் அதிகரித்து இருந்தது. அதேசமயம், இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி, 3 சதவீதத்திலிருந்து, மைனஸ் 2.1 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது.சென்ற மார்ச்சில், நுகர்வோர் சாதனங்கள் அல்லாத இதர பொருட்களின் உற்பத்தி 1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 11.9 சதவீதம் என்றளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டிருந்தது.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், பொறியியல் பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 4.1 சதவீதம் என்றளவில் பின்னடைவை கண்டுள்ளது. முந்தைய 2010-11ம் நிதியாண்டில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி 14.8 சதவீதமாக உயர்ந்திருந்தது.
சென்ற நிதியாண்டில் இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி,மைனஸ் 1 சதவீதம் என்றளவில் பின்னடைவை கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 7.4 சதவீதமாக வளர்ச்சி கண்டிருந்தது.சென்ற முழு நிதியாண்டில், நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி 4.4 சதவீதம் என்றளவில் குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 8.5 சதவீதமாக இருந்தது.இதே ஆண்டுகளில், நுகர்வோர் சாதன பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி 14.2 சதவீதம் என்றளவிலிருந்து, 2.5 சதவீதமாக குறைந்துள்ளது.
மின் உற்பத்தி துறை:அதே சமயம், இதே ஆண்டுகளில் நுகர்வோர் சாதனங்கள் அல்லாத பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி, 4.2 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற 2011-12ம் முழு நிதியாண்டில், மின் துறையின் உற்பத்தி 8.2 சதவீதம் என்றளவில் மிக சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டான 2010-11ல், 5.5 சதவீதம் என்றளவில் இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)