பதிவு செய்த நாள்
14 மே2012
09:27

மதுரை: இந்தியாவில் உள்ள முன்னணி ஐ.டி., நிறுவனங்களில் இந்தாண்டு 2 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்திய சாப்ட்வேர் மற்றும் பி.பி.ஓ.,க்கள் கூட்டமைப்பின் (நாஸ்காம்) மனிதவள மேம்பாட்டிற்கான கவுன்சில் கூட்டம் கடந்த வாரம் டில்லியில் நடந்தது. முன்னணி ஐ.டி.நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறித்து இக்கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
கடந்தாண்டு நாடு முழுதும் உள்ள முன்னணி ஐ.டி., நிறுவனங்களில் 2 லட்சம் பேருக்கு வேலை அளிக்கப்பட்டது. இந்தாண்டும் 2 லட்சம் பேரை வேலைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டது. 2009-10 ம் ஆண்டில் இன்ஜினியரிங் மாணவர்கள் 8 வது செமஸ்டர் படிக்கும்போது வளாகத்தேர்வு (கேம்பஸ் இண்டர்வியூ) மூலம் பல்வேறு ஐ.டி.நிறுவனங்களில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 2010-11ல், 7 வது செமஸ்டர் துவக்கத்திலேயே, அதாவது ஜூன், ஜூலை மாதங்களில் கேம்பஸ் இண்டர்வியூக்கள் நடத்தப்பட்டன.
செமஸ்டர் தேர்வு முடிந்த உடனேயே, வேலைக்காக பல்வேறு நிறுவனங்கள் நடத்தும் தேர்வுக்காகவும் தங்களை தயார் செய்ய மாணவர்கள் சிரமப்பட்டனர். எனவே இந்தாண்டு வளாகத் தேர்வுகளை செப்டம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாஸ்காம் தென்மண்டல இயக்குனர் புருஷோத்தமன் கூறுகையில்: ஐ.டி., துறையில் மனித ஆற்றல்தான் முக்கியம். தொண்ணூறு சதவீத நிறுவனங்கள் ஏப்ரல், மே மாதத்தில் சம்பள உயர்வை அறிவிக்கும். அமெரிக்க நிறுவனங்கள் மட்டும் ஜனவரியில் சம்பள உயர்வை அறிவிக்கும்.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்தநிலை இருந்தாலும், இந்திய ஐ.டி.நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அளிக்கும் சம்பள உயர்வை இந்தாண்டு குறைக்கவில்லை. இந்திய ஐ.டி., நிறுவனங்களுக்கு 60 சதவீத வர்த்தகம் அமெரிக்காவில் இருந்து வருவது வழக்கம். இந்தாண்டும் அதேநிலை தொடர்கிறது.
ஆனால் தகவல் தொழில்நுட்பத்திற்கான திட்டச் செலவுகளை வெளிநாட்டு நிறுவனங்கள் குறைக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு வேறு வழியின்றி, இந்திய ஐ.டி., நிறுவனங்கள் அதனை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது, என்றார்.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|