பதிவு செய்த நாள்
14 மே2012
11:41

சென்னை:கோடை விடுமுறையால், தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மே 6ம் தேதி, வசூலில் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதே நேரம், மே 27 முதல் ஜூன் 6 வரையிலான நாட்களில், தென் மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களின் முன்பதிவு முடிவுக்கு வந்துள்ளது.தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின், 23 டெப்போக்கள் சார்பில், தினசரி, 865 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோடை விடுமுறையால், வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும், கூட்டம் நிரம்பி வழிகிறது.
சென்னை, சேலம், ஈரோடு, திருச்சி, கோவையில் இருந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகியவற்றுக்கு இயக்கப்படும் பஸ்களில், கூட்டம் அதிகரித்துள்ளது.
வழக்கமாக, விரைவு போக்குவரத்துக் கழக பஸ் ஒன்றின், ஒரு நாள் வருவாய், 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது, தற்போது, 17 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் இயக்கப்படும் பஸ்களின் தினசரி வருவாய், 1.30 கோடியாக இருந்து வந்தது. இது, கடந்த வாரத்தில், 1.50 கோடியாக உயர்ந்தது.இந்நிலையில், மே 6ம் தேதி, தமிழகம் முழுவதும் விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களின் முன்பதிவு முடிவுக்கு வந்துவிட்டதால், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு மொத்தம், 931 பஸ்கள் இயக்கப்பட்டதில், வருவாயாக, ஒரு கோடியே 63 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.இதன் மூலம், நடப்பாண்டில் அதிக வருவாய் சாதனையாக கருதப்பட்ட, ஏப்ரல் 8ம் தேதி வசூலான, ஒரு கோடியே 52 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் முறியடிக்கப்பட்டுள்ளது. இது, விரைவுப் போக்குவரத்துக் கழக வரலாற்றில் அதிகபட்ச வசூல் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து, கிளை மேலாளர் ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், கோடை விடுமுறை காரணமாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களில், எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகரித்துள்ளது. அனைத்து பஸ்களிலும், முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், தேவைப்படும் இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால், வசூலில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|