பதிவு செய்த நாள்
14 மே2012
14:56

இன்டெல் நிறுவனத்தின் ஆட்டம் (Atom) சிப்செட் அடிப்படையில் மொபைல் போன் ஒன்று வடிவமைக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. இதனை இந்தியாவில் இயங்கும் லாவா இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. Xolo வரிசையில் இந்த மொபைல் போனின் பெயர் Xolo X900 என அழைக்கப்படுகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.22,000. இன்டெல் நிறுவனத்தின் சிப்செட்டுடன் முதன் முதலில் தயாரிக்கப்படும் மொபைல் ஸ்மார்ட்போன் இதுவேயாகும். இதன் விலை அதிகம் என்பதால், உயர்நிலையில் போன் வாங்குவோர் மட்டுமே இதனை வாங்குவார்கள் என்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக, மேலும் இரு மாடல்களை வடிவமைத்து வழங்க லாவா இன்டர்நேஷனல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரூ.10,000 மற்றும் ரூ.15,000 என இவற்றின் விலை இருக்கலாம்.
இன்டெல் நிறுவனத்தின் திறனை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கும் இந்த மொபைல் போனின் சிறப்புகள்:
இதன் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 2.3. இதனை பதிப்பு 4.0 வரை உயர்த்தலாம். 1.6 கிகா ஹெர்ட்ஸ் சி.பி.யு. இயக்குகிறது. இதன் திரை 4.03 அங்குல அகலத்தில் எல்.சி.டி. திரையாக அமைக்கப்பட்டுள்ளது. ரெசல் யூசன் 1024 X 600 பிக்ஸெல்கள். எல்.இ.டி. பிளாஷ், 1080 பி வீடியோ ரெகார்டிங் திறன் கொண்ட 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. முன்னால் வீடியோ அழைப்புகளுக்காக 1.3 எம்.பி. கேமரா உள்ளது. இதன் உள் நினைவகம் 16 ஜி.பி. ராம் நினைவகம் 1 ஜிபி. அண்மைத் தள அணுக்க இயக்கம், வை-பி, மைக்ரோ யு.எஸ்.பி.2.0, எச்.டி.எம்.ஐ., புளுடூத் மற்றும் 1460 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை தரப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் அதி உன்னத சிறப்பு இதன் இன்டெல் சிப் செட் தான். 32nm கட்டமைப்பில் உருவான இந்த சிப்பில் இயங்கும் சி.பி.யு. வின் இயக்க வேகம் 1.6 கிகா ஹெர்ட்ஸ் ஆகும். இன்டெல் வழக்கமாக தன் சிப் செட்களில் தரும் ஹைப்பர் த்ரெடிங் மற்றும் பர்ஸ்ட் பெர்பாமன்ஸ் தொழில் நுட்பம் இதில் உள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|