பதிவு செய்த நாள்
14 மே2012
16:52

மும்பை: ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 7.23 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 6.89 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 9.74 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் காய்கறிகளின் விலை 60.97 சதவீதம் அதிகரித்திருப்பதன் காரணமாக பணவீக்கம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பங்குச்சந்தை இன்று சரிந்து காணப்பட்டது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 77.14 புள்ளிகள் குறைந்து 16215.84 புள்ளிகளோடும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 21.10 புள்ளிகள் குறைந்து 4907.80 புள்ளிகளோடும் காணப்பட்டது. டிஎல்எஃப், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டர்ஸ், டாடா ஸ்டீல், ஸ்டெர்லைட் இண்டஸ்டிரீஸ், ஜென்டல் ஸ்டீல், எண்ணெய் மற்றும் காஸ் ஆகியவற்றின் பங்குகள் இன்று சரிந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|