பதிவு செய்த நாள்
20 மே2012
00:22

மும்பை:உணவக வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரெண்ட்ஸ் நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியை திரட்டி கொள்வதற்காக, பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்கியது. இதன் பங்கு வெளியீடு, சென்ற புதன்கிழமை துவங்கி, வெள்ளியுடன் நிறைவடைந்தது.
இந்நிறுவனத்தின் பங்குகள் வேண்டி 2.54 மடங்கிற்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக, தேசிய பங்குச் சந்தை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம், 1.17 கோடி பங்குகளை வெளியிட்டு, 182 கோடி ரூபாயை திரட்டும் வகையில், மூலதனச் சந்தையில் களமிறங்கியது. பங்கு ஒன்றை 146-155 ரூபாய் என்றளவில் வெளியிட்டது. இந்நிலையில், இந்நிறுவனத்திற்கு, 2.53 கோடி பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன.தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களிடமிருந்து, 4.68 மடங்கிற்கும், நிதி நிறுவனங்கள் அல்லாத பிரிவினரிடமிருந்து, 2.19 மடங்கிற்கும், சில்லரை முதலீட்டாளர்களிடமிருந்து, 0.55 மடங்கிற்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
பங்குச் சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், அண்மையில், பங்கு வெளியீட்டை மேற்கொண்ட பல நிறுவனங்களின் பங்குகளுக்கு போதிய அளவிற்கு ஆதரவு இல்லாததால், பங்கு வெளியீடு விலக்கி கொள்ளப்பட்டது. இவ்வகையில், நடப்பாண்டில், பங்கு வெளியீட்டை மேற்கொண்ட 8 நிறுவனங்களில், சம்வர்தனா மதர்சன் øபானன்ஸ், குட்வில் ஹாஸ்பிட்டல்ஸ், பிளாஸ்டின் இந்தியா மற்றும் கேலக்ஸி சர்பெக்டன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் விலக்கி கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|