பதிவு செய்த நாள்
20 மே2012
00:30

புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில் கார் விற்பனை, சென்ற நிதியாண்டை விட, 2 சதவீதம் குறைந்து 20 லட்சமாக சரிவடையும் என, ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.சென்ற நிதியாண்டில், நாட்டின் கார் விற்பனை, 20 லட்சத்து 16 ஆயிரமாக இருந்தது. இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டை விட, 2 சதவீதம் மட்டுமே அதிகமாகும். 2009-10ம் நிதியாண்டில் கார் விற்பனை, 30 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள்வட்டி விகிதம் அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு, செலவிடும் வருவாய் குறைந்தது @பான்றவற்றால், சென்ற நிதியாண்டில் கார் விற்பனை வளர்ச்சி குறைந்துள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், உற்பத்தி வரி, சேவை வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன. சில மாநில அரசுகளும் உள்ளூர் வரியை உயர்த்தியுள்ளன.இது போன்றவற்றால், கார் தயாரிப்பு நிறுவனங்கள் கார் விலையை அதிகரித்துள்ளன. இது, நடப்பாண்டில் கார் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.மேலும், ஐரேப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், கார் ஏற்றுமதியு பாதிக்கப்படும். ஏனெனில், இந்தியாவின் கார் ஏற்றுமதியில், இந்நாடுகளின் பங்களிப்பு, 80 சதவீதமாக உள்ளது.
ஏற்றுமதி:சர்வதேச நெருக்கடியிலும், சென்ற நிதியாண்டில், இந்தியாவில் இருந்து 5 லட்சம் கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இது, முந்தைய நிதியாண்டை விட 14 சதவீதம் அதிகமாகும். எனினும், தற்போது கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் நிதி நெருக்கடியால், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் கார் ஏற்றுமதி வளர்ச்சி எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|