பதிவு செய்த நாள்
20 மே2012
11:10

புதுடில்லி: ஏர் இந்தியா விமான ஊழியர்களின் போராட்டத்தால் அந்த நிறுவனத்திற்கு ரூ.200 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. ட்மீர்லைனர் விமானங்களை இயக்குவது தொடர்பான பயிற்சி, பணி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர்இந்தியா பைலட்டுகள் தொடர்ந்து 12வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தத்தை கைவிட சொல்லி மத்திய அரசு பலமுறை எச்சரித்தும் பைலட்டுகள் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பைலட்டுகளின் தொடர் போராட்டத்தால் ரூ.200 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. டிக்கெட்டுகளை ரத்து செய்வதாலும், பணியாற்றாத மற்ற ஊழியர்களுக்கான ஊதியம் என ஒரு நாளைக்கு சுமார் ரூ.13 கோடி முதல் 15 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|