பதிவு செய்த நாள்
20 மே2012
12:07

பறவைக்காய்ச்சல் பீதியால் கடந்த நான்கு ஆண்டுகளாக முட்டை ஏற்றுமதி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் நாமக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடிக்கு முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவை உள்நாட்டுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு முட்டை ஏற்றுமதி கடும் சரிவை சந்தித்து வருகிறது. 2007-08-ம் ஆண்டில் 122.28 கோடியாக இருந்த ஏற்றுமதி, 2008-09-ல் 109.86 கோடியாகவும், 2009-10-ல் 104 கோடியாகவும், 2010-11-ல் 54 கோடியாகவும், 2011-12-ல் 53 கோடியாகவும் சரிந்து இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் இந்தளவுக்கு சரிவை சந்திக்க காரணம் பறவை காய்ச்சல் பீதி தான். பறவை காய்ச்சல் பீதியால் வளைகுடா நாடுகளில் இந்திய முட்டைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடைதான் காரணம் என்று கூறுகின்றனர் நாமக்கல் கோழி பண்ணை உற்பத்தியாளர்கள்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|