பதிவு செய்த நாள்
22 மே2012
00:26

கோல்கட்டா:உற்பத்தி குறைந்துள்ளதால், உருளைக்கிழங்கு விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.கடந்து இரண்டு ஆண்டுகளாக, உருளைக்கிழங்கு உற்பத்தி அதிகரித்ததால், அதன் விலை குறைந்திருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், உருளைக்கிழங்கு பயிரிடுவதை குறைத்துக் கொண்டு, மாற்று பயிர்களுக்கு மாறினர். பருவ நிலை மேலும், மோசமான பருவ நிலை காரணமாகவும், உருளைக்கிழங்கின் உற்பத்தி குறைந்தது. மேற்குவங்கத்தில், உருளைக்கிழங்கு பயரிடும் பரப்பளவு, 4 லட்சம் ஹெக்டேரில் இருந்த, 3.75 ஹெக்டேராக குறைந்துள்ளது.
உருளைக்கிழங்கு உற்பத்தியில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு, ஆண்டுக்கு 1.30 கோடி டன் உருளை உற்பத்தியாகிறது. ஆனால், இம்மாநிலத்திலும், உருளைக்கிழங்கு உற்பத்தி, 20 சதவீதம் சரிவடைந்துள்ளது. இங்கு போதுமான உரங்கள், குறிப்பாக பொட்டாசியம் கிடைக்காததால், உருளைக்கிழங்கு உற்பத்தி குறைந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.அதே சமயம், அதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் உருளைக்கிழங்கின் விலை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
இங்கு, ஒரு குவிண்டால் உருளைக்கிழங்கு 1,100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.ஒரு குவிண்டால், "ஜோதி' வகை உருளைக்கிழங்கின் விலை, ஐந்து மடங்கு உயர்ந்து, 200 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது,சென்ற ஏப்ரலில், 800 ரூபாயாக இருந்தது.குளிர்பதன மையங்கள்:மேற்குவங்கத்தில், உருளைக்கிழங்கு விலை உயர்வை கட்டுப்படுத்த, குளிர்பதன மையங்களில் வைக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்கு வகைகளை வெளிச்சந்தைக்கு அனுப்பும் பணி துவங்கியுள்ளது.
இம்மையங்களில் வைக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்கு வகைகளில், 405 சதவீதம் வெளிச்சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேற்குவங்கத்தில் மொத்தம் 403 குளிர்பதன கிடங்குகள் உள்ளன. இவற்றில், 58 லட்சம் டன் உருளைக்கிழங்கு வகைகளை சேமித்து வைக்க முடியும். எனினும், உற்பத்தி குறைந்துள்ளதால், உருளைக்கிழங்குகளை இந்த குளிர் பதன கிடங்குகளில் வைப்பது, 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|