பதிவு செய்த நாள்
22 மே2012
00:29

மும்பை:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் கணக்கில் கோரப்படாத நிலையில், 16 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒருவர், ஒரு நிறுவனத்தை விட்டு வேறொரு நிறுவனத்திற்கு மாறும் போது, பழைய நிறுவனத்தில் கொண்டுள்ள வருங்கால வைப்பு நிதி கணக்கை, புதிய நிறுவனத்தின் வருங்கால வைப்பு கணக்கிற்கு மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது.
புதிய விதிமுறை:ஆனால், பலர் இந்த வழிமுறையை பின்பற்றாமல், பழைய கணக்கை முடித்துக் கொள்கின்றனர். ஒரு சிலர், புதிய நிறுவனத்தின் வாயிலாக, புதிதாக வருங்கால வைப்பு நிதி கணக்கை துவங்குகின்றனர். அவர்களின் பழைய கணக்கில் உள்ள சேமிப்பிற்கு, வட்டி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஒருவரது கணக்கில் தொடர்ந்து, 3 ஆண்டுகள் டெபாசிட் ஏதும் செய்யப்படவில்லையென்றால், அந்த கணக்கிற்கு வட்டி வழங்கப்படமாட்டாது என்ற புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் முதல், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.இதனால், ஒருவரே இரண்டு, மூன்று கணக்குகள் வைத்திருப்பது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இது போன்று வருங்கால வைப்பு நிதியத்தில், கோரிக்கை இல்லாத, 3 கோடி கணக்கில், 16 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு உள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் மதிப்பிட்டுள்ளது.
இணையதளம்:ஒருவர், தமது வருங்கால வைப்பு நிதி கணக்கை பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்ற விரும்பினால், அதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கி, மூன்று நகல்கள் எடுக்கவேண்டும்.
இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, புதிய, பழைய நிறுவனங்களுக்கு தலா ஒன்றும், வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையருக்கு ஒன்றும் அனுப்பி, கணக்கை சுலபமாக மாற்றிக் கொள்ளலாம்.கணக்கை முடிப்பதற்கும், அதற்கென உள்ள விண்ணப்பத்தை நிறுவனத்திடம் பெற்று மண்டல ஆணையருக்கு அனுப்பி தொகையை பெறலாம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|