பதிவு செய்த நாள்
22 மே2012
15:39

ஜெர்மனியை சேர்ந்த, மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம், இந்தியாவில் பல ஆண்டுகளாக கார் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. தற்போது, எம்- கிளாஸ் என்ற ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்(எஸ்.யு.வி.,) காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காருக்கு, துவக்க நாளிலேயே 150 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இரண்டு வேரியன்ட்களில் இந்த கார் கிடைக்கும். இதில், ஏ.எம்.ஜி., பாடி கிட் வேரியன்ட்," எம்எல்350சிடிஐ புளூடெக்' என்ற காரின் விலை ரூ.66 லட்சம். முன்பதிவு செய்தவர்களில் 100 பேருக்கு மட்டுமே இந்த கார் டெலிவரி செய்யப்படும். இந்த கார், வெளிநாட்டில் முழுமையாக உருவாக்கப்பட்டு, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதுதவிர,உதிரிபாகங்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் உருவாக்கப்படும், ஸ்டாண்டர்டு வேரியன்ட் காரின் விலை ரூ.56.9 லட்சமாக இருக்கும். எம்-கிளாஸ் காரில், 3.0 லிட்டர், 24 வால்வு, வி6 டர்போ புளூடெக் டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 9 "ஏர் பேக்'குகளுடன்,பல பாதுகாப்பு அம்சங்கள் டம் பெற்றுள்ளன. இந்த கார், பூஜ்ஜியத்தில் 100 கி.மீ., வேகத்தை, 7.4 வினாடிகளில் தொட்டு விடும், அதிகபட்சமாக, மணிக்கு, 224 கி.மீ., வேகத்தில் செல்லும்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|