பதிவு செய்த நாள்
23 மே2012
13:51
மும்பை : சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பில் கடந்த 6 நாட்களாக காணப்பட்ட சரிவு இன்றும் தொடர்கிறது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.39 ஆக சரிந்து அதிர்ச்சி அளித்த நிலையில் இன்று மேலும் 43 காசுகள் வரை சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.82 ஆக இருந்தது. மதியத்திற்கு மேல் மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ரூ.55.95 ஆக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து நிலவி வரும் நிதிச் சிக்கல் காரணமாகவும், அமெரிக்க டாலருக்கு நிகரான யூரோவின மதிப்பும் குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு நிலை காணப்பட்டது. இந்த நிலை மேலும் மோசமாகி இன்றைய வர்த்தக நேர முடிவின் போது ரூபாயின் மதிப்பு 56.20 ஆக இருந்தது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|