பருத்தி உற்பத்தி 10 சதவீதம் குறைய வாய்ப்புபருத்தி உற்பத்தி 10 சதவீதம் குறைய வாய்ப்பு ... ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் லாபம் இரு மடங்காக உயர்வு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் லாபம் இரு மடங்காக உயர்வு ...
தொலைக்காட்சி காண்பதில் ஆர்வம் இல்லாததால்...ஐ.பி.எல்., போட்டி விளம்பர வருவாய் ரூ.300 கோடி குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2012
00:25

ஐ.பி.எல்., இறுதிப் போட்டி இன்று நடைபெறும் நிலையில், நடப்பு சீசன் 5ல் தொலைக்காட்சி வாயிலான விளம்பர வருவாய், சென்ற சீசனை விட, 30 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டி, கடந்த, 2008ம் ஆண்டு அறிமுகமானது. இப்போட்டியை, 10 ஆண்டுகளுக்கு, 'செட் மேக்ஸ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை மல்டி ஸ்கிரீன் மீடியா (எம்.எஸ்.எம்) பெற்றுள்ளது.
விளம்பர வருவாய்:ஐந்தாவது ஆண்டாக, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த ஐ.பி.எல்., 5 போட்டி, இன்றுடன் முடிவடைகிறது. இப்போட்டியின் தொலைகாட்சி ஒளிபரப்பு வாயிலாக, 1,100 கோடி ரூபாய் முதல், 1,200 கோடி ரூபாய் வரை விளம்பர வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், 600 கோடி ரூபாய் அளவிற்குதான் கிடைக்கும் என, ஊடக வட்டாரம் மதிப்பிட்டுள்ளது. சென்ற ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல்., 4 சீசனில், விளம்பர வருவாய் மூலம், 900 கோடி ரூபாய் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு போட்டியின் விளம்பர வருவாய் குறித்து, எம்.எஸ்.எம்., நிறுவன தலைவர் (ஒருங்கிணைப்பு விற்பனை பிரிவு) ரோஹித் குப்தாவை தொடர்பு கொண்ட போது, 'வருவாய் விவரம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை' என்று தெரிவித்தார்
நடப்பு ஐ.பி.எல்., போட்டியில், தொலைக்காட்சி வாயிலான விளம்பர வருவாயின் சரிவிற்கு, பல நிறுவனங்களின் பங்களிப்பு குறைந்துள்ளதும் முக்கிய காரணமாகும்.
கடந்த ஆண்டு வோடபோன், பெப்சி, கேட்பரி-கிராப்ட், எல்.ஜி., சாம்சங், கோத்ரெஜ், ஏர்டெல் டீ.டி.எச் உள்ளிட்ட, 10 நிறுவனங்கள் விளம்பரங்களை வெளியிட்டன. ஆனால், நடப்பாண்டு போட்டியில் வோடபோன், பெப்சி, ஹூண்டாய், ஐடியா செலுலார், டாட்டா போட்டோன் ஆகிய ஐந்து நிறுவனங்கள் மட்டுமே பிரதான விளம்பரதாரர்களாக உள்ளன.
சலுகை:விளம்பர வருவாயை உயர்த்தும் பொருட்டு, விளம்பர கட்டணங்கள் ஓரளவு குறைக்கப்பட்டதாகவும், சில விளம்பரங்களுக்கு கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டதாகவும், தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஐ.பி.எல்., போட்டியை அடுத்த, 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமையை பெற்றிருப்பதால், அதிக அளவில் தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்க எம்.எஸ்.எம்., முன்வரவில்லை என்று தெரிகிறது.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறும்போது, 'நிறுவனம், தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்குவதற்கு பதிலாக, இலவசமாக கூடுதல் விளம்பர நிமிடங்களை வழங்கியுள்ளது' என்று தெரிவித்தார்
எனினும், இன்று நடைபெறும் இறுதிப் போட்டிக்கான விளம்பரக் கட்டணம் 10 வினாடிக்கு 8-11 லட்ச ரூபாய் என்ற அளவில் உள்ளது. லீக் போட்டியின் போது ஒளிபரப்பான விளம்பரங்களுக்கு, 10 வினாடிக்கு, 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.எம்.எஸ்.எம்., நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எஸ்.எம்., சாட்டிலைட் (சிங்கப்பூர்) நிறுவனம், ஐ.பி.எல்., சீசன் 2 முதல் சீசன் 10 வரையிலான போட்டிகளை தொலைகாட்சியில் ஒளிபரப்ப, ஐ.பி.எல்., அமைப்பிடம் 8,200 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த, 2009ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. நடப்பாண்டு போட்டிக்கான ஒப்பந்தம், கடந்த 2010ம் ஆண்டு ஜூலையில் கையொப்பமானது.
ஐ.பி.எல்.,போட்டியை தொலைக்காட்சியில் பார்ப்பது, கடந்த ஆண்டில் இருந்து குறைந்து வருகிறது. நடப்பாண்டும், அதே நிலைதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி.வி.ஆர்., குறியீடு:டி.ஏ.எம்., ஸ்போர்ட்ஸ் நிறுவனம், இதுவரை நடைபெற்ற, 68 போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்தவர்களின் சராசரி எண்ணிக்கை அடிப்படையிலான தரப் புள்ளிகளை (டி.வி.ஆர்.,) வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2008ம் ஆண்டு நடைபெற்ற முதல் போட்டியில் டி.வி.ஆர் 4.81 புள்ளிகளாக இருந்தது. இது, அடுத்த ஆண்டு 4.17 ஆக குறைந்தது. மூன்றாவது ஆண்டில் 4.65 ஆக அதிகரித்தது. எனினும், கடந்த 4வது ஐ.பி.எல்., சீசனில் இது 3.39 ஆகவும், நடப்பு 5வது சீசனில் 3.27 ஆகவும் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராண்டு மதிப்பு:இந்நிலையில், பிராண்டு பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ஐ.பி.எல்-ன் பிராண்டு மதிப்பு 29.29 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல்., அமைப்பின் நிர்வாக குளறுபடிகள், வெளிப்படையற்ற, ஒளிவுமறைவான செயல்பாடு, வீரர்கள் மீதான 'ஸ்பாட் பிக்சிங்' குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை காரணமாக, கடந்த 2010ம் ஆண்டு 413 கோடி டாலராக இருந்த ஐ.பி.எல்-ன் பிராண்டு மதிப்பு, நடப்பாண்டு 292 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, சென்ற 2011ம் ஆண்டு, 367 கோடி டாலராக இருந்தது. இதே நிலை தொடர்ந்தால், கடந்த 2009ம் ஆண்டு இருந்து போல், ஐ.பி.எல்.,-ன் பிராண்டு மதிப்பு 200 கோடி டாலராக சரிவடையம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல்., போட்டிகளை தொலைக்காட்சியில் பார்ப்போர் குறித்த தர புள்ளிகள் குறைந்துள்ளதாலும், அதன் பிராண்டு மதிப்பு சரிவடைந்துள்ளதாலும் எல்.ஜி., கோத்ரெஜ் போன்ற நிறுவனங்கள் நடப்பு போட்டியில் விளம்பரங்களை வெளியிடவில்லை.
சாம்சங், செல்கான் மொபைல்ஸ், சோனி இந்தியா, கேட்பரி-கிராப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் கூட, கடைசி கட்டத்தில் தான் நடப்பு ஐ.பி.எல்., போட்டியில் விளம்பரங்களை தர ஒப்புக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)