பதிவு செய்த நாள்
27 மே2012
12:09
நாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 277 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்குப் பின் முட்டை விலை ஏற்றம் கண்டிருப்பது, கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 275 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, இரண்டு காசுகள் உயர்த்தி, 277 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை விபரம்:சென்னை, 283 காசுகள், பெங்களூரு, 276 காசுகள், மைசூரு, 275 காசுகள், ஹைதராபாத், 247 காசுகள், மும்பை, 279 காசுகள், விஜயவாடா, 246 காசுகள், கோல்கத்தா, 270 காசுகள், பார்வாலா, 232 காசுகள், டில்லி, 247 காசுகள்.இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டைக் கோழி விலை கிலோ, 44 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை கிலோ, 73 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|