பதிவு செய்த நாள்
28 மே2012
00:59

புதுடில்லி:நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டின், ஜனவரி முதல் மார்ச் வரையிலான, முதல் காலாண்டில், உள்நாட்டில், 28 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. இது, கடந்த 2011ம் ஆண்டின் இதே காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 6.6 சதவீதம் அதிகம் என, ஆய்வு நிறுவனமான, "கார்ட்னர்' வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு கணக்கீட்டு காலத்தில், மொபைல் கம்ப்யூட்டர்கள் விற்பனை, 27 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழக அரசு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடி கம்ப்யூட்டர்கள் வழங்கியதை அடுத்து, லெனோவா நிறுவனம், இவ்வகை கம்ப்யூட்டர்கள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.
குறிப்பாக, இவ்வகை கம்ப்யூட்டர்கள் விற்பனை முதல் காலாண்டில், 64 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.நாடு தழுவிய அளவில், நடப்பு 2012ம் ஆண்டில், கம்ப்யூட்டர்கள் விற்பனை, 1.25 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டு, விற்பனையை விட, 17 சதவீதம் அதிகமாகும்.நடப்பாண்டின் முதல் காலாண்டில், எச்.பி.நிறுவனத்தின் கம்ப்யூட்டர் விற்பனை, 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, டெல் நிறுவனத்தின் கம்ப்யூட்டர் விற்பனை, 11 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிராண்டு இல்லாத, அசெம்பிள் செய்யப்படும், சாதாரண வகை கம்ப்யூட்டர்களின் பங்களிப்பு, 45 சதவீதமாக உள்ளது. கணக்கீட்டு காலத்தில், இவ்வகை கம்ப்யூட்டர்கள் விற்பனை, 20 சதவீதம் குறைந்துள்ளது.அதேசமயம், மொத்த கம்ப்யூட்டர் விற்பனையில், சர்வதேச பிராண்டுகளான ஏசர், டெல், எச்.பி., லெனோவா ஆகிய நிறுவனங்களின் பங்களிப்பு, 54.5 சதவீத அளவிற்கு உள்ளது.
பணவீக்கம்:உள்நாட்டைச் சேர்ந்த எச்.சி.எல்.நிறுவனத்தின் கம்ப்யூட்டர் விற்பனை, நடப்பாண்டின் முதல் காலாண்டில், 5.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது. உள்நாட்டில், பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் பொருளாதார நிலை நன்கு இல்லாததால், பல நுகர்வோர்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை ஒத்திப் போட்டு வருகின்றனர். இதன் காரணமாக, இதன் விற்பனை வளர்ச்சி குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.உற்பத்திவரி மற்றும் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால், கம்ப்யூட்டர்களின் விலை உயர்ந்துள்ளது. இதுவும், இவற்றின் விற்பனை வளர்ச்சியை பாதிப்பதாக உள்ளது என, கார்ட்னர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|