பதிவு செய்த நாள்
28 மே2012
11:47

புதுடில்லி:"அரசின் பிரபலமான இணையதளங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான முக்கியமான இணையதளங்களுக்குள் நுழைந்து, அவற்றில் உள்ள தகவல்களை சிதைப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர். எனவே, இணையதளங்களை பயன்படுத்துவோர், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என, சைபர் செக்யூரிட்டி ஏஜன்சி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கம்ப்யூட்டர் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளைக் கையாளும், சைபர் செக்யூரிட்டி ஏஜன்சி கூறியுள்ளதாவது:அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் முக்கியமான இணையதளங்களுக்குள், அனுமதியின்றி நுழைந்து, அவற்றில் உள்ள தகவல்களை சிதைப்பதற்கும், திருடுவதற்கும் சிலர் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டி.டி.ஓ.எஸ்., எனப்படும் சேவை மூலமாக இந்த முயற்சியை அவர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே, இணையதளங்களை பயன்படுத்துவோர், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் போதிய பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, டி.டி.ஓ.எஸ்., சேவையை ஏற்க மறுக்கும் அல்லது கண்டறியும் தொழில் நுட்பத்தை, தங்கள் கம்ப்யூட்டர்களில் சேர்த்துக் கொள்ளலாம்.இவ்வாறு சைபர் செக்யூரிட்டி ஏஜன்சி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|