பதிவு செய்த நாள்
28 மே2012
12:28

மும்பை:போயிங் 777 ரக விமானங்கள் ஐந்தை, ஏர் - கனடா நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுவது குறித்து, ஏர் இந்தியா நிறுவனம் ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக, ஏர் இந்தியா நிறுவன வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: ஏர் இந்தியா நிறுவன விமானங்களை, குத்தகைக்கு விடுவது தொடர்பாக, இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவும், அது தொடர்பான வழிமுறைகளை உருவாக்கவும், ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள், விரைவில் கனடா செல்ல உள்ளனர்.அடுத்த இரண்டு மூன்று வாரங்களில், குத்தகைக்கு விடுவது தொடர்பான ஒப்பந்தம், இறுதி செய்யப்படும். கனடா நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்று, ஏர் -கனடா நிறுவனம். ஐந்து கண்டங்களில் உள்ள, 180 நகரங்களுக்கு, இந்த நிறுவனம் விமானங்களை இயக்குகிறது. அத்துடன், ஏர் கனடா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில், உள்நாட்டில் விமான சேவையையும் நடத்துகிறது என்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|