பதிவு செய்த நாள்
28 மே2012
12:37

சென்னை : தங்கத்தின் விலை மீண்டும் 22 ஆயிரம் ரூபாயை நெருங்கி கொண்டு இருக்கிறது. தங்கத்தின் மீதான உற்பத்தி வரி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தங்கத்தின் விலை கணிசமாக குறைந்தது. இருந்தும் அதற்கு அடுத்த சில நாட்களிலேயே தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை இப்போது 22 ஆயிரம் ரூபாயை நெருங்கி கொண்டு இருக்கிறது. காலையில் ரூ.2738 ஆக இருந்த ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை மாலையில் ரூ.9 அதிகரித்து ரூ.2747 ஆக இருந்தது. மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2747-க்கும், சவரனுக்கு ரூ.21,976க்கும், 24காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.29,385-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.58.70க்கும், பார் வெள்ளியின் விலை கிலோ ரூ.54,870-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|