பதிவு செய்த நாள்
28 மே2012
12:40

தேனி : ஆன்-லைன் வர்த்தகத்தால், தேனி மார்க்கெட்டில் பருப்பு, பயறு வகைகளின் விலைகள் உயர்ந்துள்ளன. தேனி மார்க்கெட்டில், கடந்த வாரத்தை விட இந்த வாரம், அனைத்து ரக பருப்பு, பயறு வகைகளின் விலையும் உயர்ந்தன. ஆன்-லைன் வர்த்தகமும், டாலர் விலை உயர்வும், இதற்கு காரணம் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
துவரம் பருப்பு, கிலோவிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து, 62.80 ரூபாயாக இருந்தது. உளுந்து, கிலோவுக்கு 2 ரூபாய் உயர்ந்து, 52.80 ரூபாயாக இருந்தது. பாசிப்பயறு, ஒரு ரூபாய் உயர்ந்து, 52.80 ரூபாய் ஆகவும், பொறிகடலை 2 ரூபாய் உயர்ந்து, 69.50 ரூபாய் ஆகவும், பச்சைபட்டாணி, 8 ரூபாய் விலை உயர்ந்து, தற்போது 38 ரூபாய் ஆகவும் உள்ளது. கடந்த மூன்று வாரத்தில், கடலை பருப்பு கிலோவிற்கு, 7 ரூபாய் விலை உயர்ந்து, 57.80 ரூபாயாக உள்ளது.
அரிசி: ஐ.ஆர்., 20, கல்சர், செல்லப்பொன்னி, கர்நாடகா பொன்னி உட்பட அனைத்து ரக அரிசி விலைகளும், கிலோவுக்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளன. ஐ.ஆர்., 20 கிலோவிற்கு 19.60 ரூபாயாகவும், கல்சர் 20.20 ரூபாயாகவும், செல்லப்பொன்னி 21.80 ரூபாயாகவும், டீலக்ஸ் பொன்னி 24.50 ரூபாயாகவும் உள்ளது.
வெல்லம் கிலோ 31.30 ரூபாயாகவும், புளி 50 ரூபாயாகவும், வத்தல் 60 ரூபாயாகவும், பாமாயில் ஒரு ரூபாய் விலை உயர்ந்து 62 ரூபாயாகவும், தேங்காய் எண்ணெய் விலை 93.35 ரூபாயாகவும், கடலை எண்ணெய் 120 ரூபாயாகவும் உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|