பதிவு செய்த நாள்
28 மே2012
13:47

புதுடில்லி:டீசல் கார்கள் மீதான கலால் வரியை உயர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை இடையே வேறுபாடு தொடர்ந்து கொண்டிருப்பதால், டீசலில் ஓடும் கார்களை வாங்குவது, மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதன் மூலம் மானிய விலையில் வழங்கப்படும் டீசலின் நுகர்வும் கூடியுள்ளது. அதனால், "டீசல் கார்கள் மீது அதிக அளவிலான கலால் வரி விதிக்க வேண்டும்,' என, மத்திய நிதி அமைச்சகத்திற்கு பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. கூடுதல் கலால் வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, குறைந்த விலையில் டீசலை விற்பதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட முடியும் என்றும் கூறியுள்ளது.
அமைச்சகம் ஆய்வு:அதே நேரத்தில், பெட்ரோலிய அமைச்சகத்தின் இந்த யோசனைக்கு, கனரக தொழில்கள் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இருந்தாலும், "டீசல் கார்கள் மீது அதிக அளவில் கலால் வரி விதிப்பது என்ற யோசனை, அரசின் பரிசீலனையில் உள்ளது. பட்ஜெட்டின் போ@த எதிர்பார்த்தது. ஆனாலும், கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க கொஞ்சம் கால அவகாசமாகும்' என, நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.மேலும், "டீசல் கார்கள் மீது அதிக அளவில் கலால் வரி விதிக்க வேண்டும் என்ற யோசனைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளதால், இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டியது அவசியம். தற்போது தான் பட்ஜெட் நிறைவேறியுள்ளது. வரி விதிப்பில் ஏதாவது மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமெனில், சில மாதங்கள் ஆகவேண்டும்' என, நிதி அமைச்சகத்தின் மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்.
விலை எவ்வளவு?சமீபத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டதன் மூலம், டில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 74 ஆகவும், டீசல் விலை 50 ரூபாயாகவும் உள்ளது. அதுமட்டுமின்றி, எரிசக்தி தொடர்பாக நியமிக்கப்பட்ட கீர்த்தி பரீக் கமிட்டியும், டீசல் கார்கள் மீது, கூடுதல் 80 ஆயிரம் ரூபாய் அளவுக்கு கலால் வரி விதிக்க வேண்டும் என, பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|