பதிவு செய்த நாள்
28 மே2012
14:35

மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்தால் பெட்ரோல் விலை சிறிது குறையலாம் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 35 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும் உலக சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்ததில் இருந்து தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதுவரை இல்லாத அளவிற்கு லிட்டருக்கு ரூ.7.50 வரை உயர்த்தப்பட்டது. இதுநாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கட்சியினரும், காங்கிரஸ் உடன் மத்தியில் கூட்டணி அமைத்து இருக்கும் கட்சிகளுமே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் பெட்ரோல் விலையை குறைக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
இந்நிலையில் பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அமைச்சர் நாராயணசாமி யோசனை கூறியுள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம் பெட்ரோல் விலை கொஞ்சம் குறைக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|