பதிவு செய்த நாள்
28 மே2012
14:53

புதுடில்லி : டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை இப்போதைக்கு உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 வரை உயர்த்தப்பட்டது, அதனால் நாடுமுழுவது பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன், பெட்ரோலிய துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசுவும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்பால் ரெட்டி, டீசல், சமையல் எரிவாயு மற்றும் பிற எண்ணெய் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து எதுவும் பேசவில்லை. தற்போது அதற்கான நேரமும் கிடையாது. பணவீக்கம் குறித்து விவாதித்தோம். மற்றபடி இப்போதைக்கு டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட மாட்டாது என்று கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|