பதிவு செய்த நாள்
28 மே2012
16:45

மும்பை : சரிவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டு இருக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் காணப்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தையும் 200 புள்ளிகள் உயர்வுடன் முடிந்து இருக்கிறது. வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 199.02 புள்ளிகள் உயர்ந்து 16,416.84-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 65.25 புள்ளிகள் உயர்ந்து 4,985.65-ஆகவும் காணப்பட்டது.
இன்றைய பங்குவர்த்தகத்தில் எஸ்.பி.ஐ., பெல், டாடா பவர், ஹிந்தால்கோ, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன. ஐரோப்பிய சந்தைகளில் நிலவி வந்த மந்தமான சூழ்நிலை இப்போது மாறிவருவதாலும், சர்வதேச அளவிலும் பொருளாதார சூழல் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்து வருவதாலும் இந்திய பங்குசந்தைகள் உயர்ந்து காணப்பட்டதாக முதலீட்டாளர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|