காபி உற்பத்தி 51 லட்சம் மூட்டைகளாக குறையும்காபி உற்பத்தி 51 லட்சம் மூட்டைகளாக குறையும் ... பெட்ரோல் விலை ரூ.1.25 குறையும்: ஐ.ஓ.சி., தலைவர் புடோலா தகவல் பெட்ரோல் விலை ரூ.1.25 குறையும்: ஐ.ஓ.சி., தலைவர் புடோலா தகவல் ...
மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால்...தங்கம் இறக்குமதி 32 சதவீதம் சரிந்தது- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2012
00:33

மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், சென்ற 2011-12ம் நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 32.4 சதவீதம் சரிவடைந்துள்ளதாக ராய்டர் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறை:நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளதால், வர்த்தகப் பற்றாக்குறையும், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. ஆகவே இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, மத்திய அரசு, சென்ற ஜனவரியில் தங்கம் மீதான சுங்கவரியை 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக உயர்த்தியது. இதையடுத்து, சென்ற மார்ச் மாதம், மீண்டும் சுங்கவரி 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இந்த வரி உயர்வால், நாட்டின் தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது.
சென்ற நிதியாண்டில், நாட்டின் தங்கம் இறக்குமதி 655 டன்னாக இருக்கும் என, ராய்ட்டர் கணித்துள்ளது. முந்தைய 2010-11 ம் நிதியாண்டில், நாட்டின் தங்கம் இறக்குமதி 969 டன்னாக இருந்தது.
கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பரில், அமெரிக்க வர்த்தக வங்கியான லெஹ்மன் பிரதர்ஸ் திவாலானது. இதன் தாக்கம் சர்வதேச நாடுகளில் எதிரொலித்தது. இந்தியாவின் தங்கம் இறக்குமதி, கடந்த 2009-10ம் நிதியாண்டில், 816 டன்னாக குறைந்து காணப்பட்டது.
வரி உயர்வு:சென்ற மார்ச் மாதம், நாட்டின் தங்கம் இறக்குமதி 68 சதவீதம் குறைந்து 90 டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், முந்தைய நிதியாண்டின், இதே மாதத்தில் தங்கம் இறக்குமதி 283 டன்னாக இருந்தது.இத்தகைய மிகப் பெரிய சரிவிற்கு, மத்திய அரசின் வரி உயர்வுதான் முக்கிய காரணமாகும்.
இந்த வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் 21 நாட்கள் நகை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர்.இதுவும், நகை இறக்குமதி, சரிவடைய முக்கிய காரணமாகும்.வங்கி சாரா நிதி நிறுவனங்கள்மத்திய அரசு போன்று, ரிசர்வ் வங்கியும், தங்க நகை அடமான நிறுவனங்கள், வங்கிகளிடம் கடன் பெறுவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. தங்க நகை அடமான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள், குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளன. எனவே, இந்நிறுவனங்களின் தங்க இறக்குமதிக்கும், தங்க நகை அடமானத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆராய, கே.யு.பீ.ராவ் தலைமையிலான குழுவை, ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
இது குறித்து தங்க நகை கடன் நிறுவனங்கள் சங்க தலைவரும், முத்தூட் பைனான்ஸ் தலைவருமான ஜார்ஜ் அலெக்சாண்டர் முத்தூட் கூறியதாவது:தங்கம் இறக்குமதிக்கும்,தங்க ஆபரணங்கள் அடமானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நுகர்வோர் யாரும், தங்கத்தை இறக்குமதி செய்து, வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் அடமானம் வைப்பதற்காக, அதை நகையாக மாற்றுவதில்லை.
ஆபரணங்களின் செய்கூலி :15 சதவீதமாக உள்ளதால், இது போன்று மாற்றும்போது, தங்கத்தின் மதிப்பில் 50 சதவீதத்தை இழக்க நேரிடும். இறக்குமதி சார்ந்த தங்க நாணயங்கள், தங்க கட்டிகள் ஆகியவற்றுக்கு நிறுவனம் கடன் கொடுப்பதில்லை. இவ்வாறு ஜார்ஜ் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி:வங்கி சாரா நிதி நிறுவனங்கள், தங்க ஆபரணங்களின் மதிப்பில், 60 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், தங்க கட்டிகளின் அடமானத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கட்டுப்பாடுகள், பொது துறை வங்கிகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.:இந்நிலையில், இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என, தங்க நகை கடன் நிறுவனங்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இறக்குமதி:மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளின் பயனாக, பொதுத்துறையை சேர்ந்த மெட்டல்ஸ் அண்டு மினரல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது.
இந்நிறுவனத்தின் தங்கம் இறக்குமதி, சென்ற நிதியாண்டில் 30 சதவீதம் குறைந்து 245 டன்னில் இருந்து 171 டன்னாக சரிவடைந்துள்ளது.சென்ற முழு நிதியாண்டில், 560 கோடி டாலர் மதிப்பிற்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் இதன் மதிப்பு 330 கோடி டாலராக இருந்தது. தங்கம் விலை உயர்ந்துள்ளதால், அதன் இறக்குமதி குறைந்துள்ள போதிலும், மதிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)