பதிவு செய்த நாள்
29 மே2012
09:52

புதுடில்லி:பெட்ரோல் விலை லிட்டருக்கு, 1.25 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.பெட்ரோல் விலையை, லிட்டருக்கு 7.50 ரூபாய் அதிகாரித்து, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டன. இந்த விலை உயர்வுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் ஆர்.எஸ்.புடோலா, நேற்று கூறுகையில், "சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்தால், உள்நாட்டிலும் பெட்ரோல் விலையை குறைத்து, அதன் பயன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.ஏற்கனவே, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, பெட்ரோல் விலையை குறைத்துள்ளோம். தற்போது, கச்சா எண்ணெய் விலையில், சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதே நிலை இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்தால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலையை லிட்டருக்கு, 1.25 ரூபாய் வரை குறைக்க வாய்ப்புள்ளது' என்றார். இந்த விலை குறைப்பு அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளியாகலாம் என்றும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
டில்லியில் குறைப்பு:இதற்கிடையே, டில்லி மாநில அரசின் பட்ஜெட், நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பெட்ரோலுக்கு மாநில அரசு சார்பில் விதிக்கப்படும் மதிப்பு கூடுதல் வரியில், 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், டில்லியில் பெட்ரோலின் விலை, லிட்டருக்கு 1.26 ரூபாய் குறையும். இந்த விலை குறைப்புக்கு பின், டில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, 71.92 ரூபாயாக இருக்கும்.
மேலும் பொது செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|