மும்பை மார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவு மும்பை மார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவு ... சுந்தரம் பைனான்ஸ்80 சதவீத டிவிடெண்டு சுந்தரம் பைனான்ஸ்80 சதவீத டிவிடெண்டு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
80 கி.மீ., வேகத்தில் செல்லும் சைக்கிள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2012
14:07

பொதுவாக சைக்கிள்களில் செல்பவர்கள் குறைந்தபட்ச வேகத்திலேயே செல்ல முடியும். ஆனால், 80 கி.மீ., வேகத்திலும் செல்லலாம் என்று சவால் விட்டுள்ளது, ஆடி கார் நிறுவனம். இந்த நிறுவனம், இ - பைக் என்ற பெயரில் ஒரு சைக்கிளை உருவாக்கியுள்ளது. ரேஸ் கார்களுக்கு இணையாக, இந்த சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதை சாதாரண சைக்கிள் போல, கால்களால் பெடலை மிதித்தும் ஓட்டலாம். இரண்டாவதாக, எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயக்கும் போது, அதிகபட்சமாக, மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் செல்லும். மூன்றாவதாக, பெடல் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் என இரண்டு வசதியையும் பயன்படுத்தும் போது, மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் சிட்டாக பறந்து செல்லும். இந்த சைக்கிளில், ஸ்மார்ட்ஃபோன் வடிவில் ஒரு கம்ப்யூட்டரும் பொருத்தப்படடுள்ளது. சைக்கிள் ஓட்டியின் ஹெல்மட்டில், பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் படங்கள் எடுத்து, இந்த கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொள்ளலாம். இத்துடன், இணைய தள வசதியையும் பயன்படுத்த முடியும்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)