பதிவு செய்த நாள்
29 மே2012
16:01

டிவிஎஸ் மோட்டார்ஸ் 125சிசி பைக்கை விற்பனைக்கு கொண்டு வருகிறது. நாட்டின் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ் கம்பெனி ஸ்டார் ஸ்போர்ட் மற்றும் அப்பாச்சி மட்டுமே அந்த நிறுவனத்தின் விற்பனையில் ஓரளவுக்கு கைகொடுத்து வருகிறது. மூன்றாம் இடத்தில் இருந்த டிவிஎஸ் மோட்டார்சை ஹோண்டா கடந்த சில மாதங்களுக்கு முன் பின்னுக்குத் தள்ளியது. இந்த நிலையில், மீண்டும் தனது மார்க்கெட்டை பிடிக்க டிவிஎஸ் திட்டமி்ட்டுள்ளது. இதற்காக, 125 சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட புத்தம் புதிய பைக்கை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. ரேடியோன் 125டிஎக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய பைக் வரும் ஜூலை-ஆகஸ்ட் இடையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|