பதிவு செய்த நாள்
30 மே2012
23:52
டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த வீல்ஸ் இந்தியா நிறுவனம், மோட்டார் வாகனங்களுக்கு தேவையான உருக்கு சக்கரங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 34.35 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 39 சதவீதம் (24.64 கோடி ரூபாய்) அதிகமாகும்.சென்ற முழு நிதியாண்டில், இந்நிறுவனத்தின் வருவாய், 22 சதவீதம் அதிகரித்து, 2,078 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 1,701 கோடி ரூபாயாக இருந்தது.இந்நிறுவனம், சென்ற நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு, 60 சதவீத டிவிடெண்டை வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு, 6 ரூபாய் டிவிடெண்டு கிடைக்கும்.இந்நிலையில், இந்நிறுவனம், 40 சதவீத இடைக்கால டிவிடெண்டை வழங்கியது. ஆக, சென்ற நிதியாண்டிற்கு இந்நிறுவனம் 100 சதவீத டிவிடெண்டு (6+4 ரூபாய்) வழங்குகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|